2012 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

February 25, 2012

உயிர்வாழும் காலம் வரை














மலர்களுக்கே மகுடம்
சூட்டும் ரோஜாவே
என் மனதின்
யாசகங்களை அறிவாயா?

உன் மீது பட்டுத்
தெறித்த சூரிய ஒளி
என் மீதும் படவேண்டும்
என தவமிருக்கிறேன்

உனைத் தீண்டி
போகும் தென்றல்
எனைத் தீண்டாதா
என தவிக்கின்றேன்

உன்னை நனைத்த
மழைத்தூறல்
என்னை நனைக்காதா
என மனம் ஏங்குறேன்

நீ சிந்திய கண்ணீர்த்துளி
தண்ணீர் என்பதாலே
பன்னீரையும் வெறுக்கின்றேன்

உன் மீதான என் காதல்
என் உயிர்வாழும்
காலம் வரை நீளும்...

என்னோடும் எப்போதும்......



















சிந்தைக்குள் நின்று
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம்
என் வலியின் பிரசவிப்பாய்....

சில்லென்ற ஒரு காதலென
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே
சீரழிந்து போனதாய் என் காதல்...

இடமாற்றம் இடறிய போது
இல்லாமல் போன காதலால்
இதயம் ஓய்ந்ததே....

இன்றும் நீ காணாமல்
இதயம் பெரும் தடுமாற்றத்தில்......

பார்வையின் ஜீவிதத்தில்
பயணித்த நேசம்
பாதை மாறிப் போன போனதாய்.....
ஆனாலும்.....
பிரிந்து போனாய் நீ
நின் நினைவு மட்டும் பிரியாமல்
என்னோடும் எப்போதும்......

காதல்..


 காதல் ஒரு சோதனை
வெற்றியா, தோல்வியா
சொல்ல முடியாது,

காதல் ஒரு வேதனை
நரகமா, சொர்க்கமா
உணர முடியாது,,

காதல் ஒரு மதில் மேல் பூனை
நல்லதா, கெட்டதா
புரிய முடியாது,,,

காதல் ஒரு நெருப்பு
தெரிந்தும் போய்-எரிந்து
போவோர் ஆயிரம் ஆயிரம்
ஏனெனில்
காதல் ஒரு போதை-பிடித்தால்
விடாது....

இனியவளே..











இனியவளே..
என் காதலை சொல்ல ஒன்றுக்கு
மூன்று பூக்கள் பறித்து வந்தேன்
ஏதேனும் ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று
என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன் எல்லா
பூக்களும் சிரிக்கிறது

January 10, 2012

நம் காதல்..!!



பதினாறில் கவர்ச்சி... 

பதினெட்டில் மலர்ச்சி... 

இருபதில் இணைந்தோம்.. 

இணைந்த இரு வருடத்தில் பிரிந்தோம்.. 

பிரிந்த பாதியிலேயே புரிந்தோம்... 

புரிந்து விட்டுப் பார்த்த பின் 


தான் தெரிந்தது இனி 


பிரியவே இயலாதென...! 

விக்கல்



விக்கல் எடுக்கின்றது... 
தண்ணீர் 
குடிக்க மறுக்கிறேன் .... 
ஏன் என்றால் நினைப்பது - நீயாக 
இருந்தால் 
நிலைக்கட்டும் இன்னும் சில 
நிமிடங்கள்....

தவிப்பு!!!.



இரவு நேரப் பேருந்துப் பயணத்தின், 
ஜன்னலோர வெமண்மதி நீ - என்னுடனேயே 
பயணித்தாலும், எட்ட நின்று ரசிக்கத் தான் முடிகிறது. 
தொட்டுப் பேசிப் பழக முடியாத தவிப்பில், 
இரவைக் கொன்று புதைக்கும் 
குற்றவாளியாக நான்!!!....

சில மணி நேரங்கள்



நீ என்னுடன் பேசிக்கொண்டிருந்த சில மணி நேரங்கள் வினாடியாய் கழிந்தது! 

உனக்காக காத்திருக்கும் சில வருடங்கள் வினாடியாய் தெரிகிறது.

கல்லறையில்




என்னை காக்க வைப்பதிலே உனக்கு என்ன தான் சந்தோஷமோ 
சரி விடு 
காத்து கொண்டு இருக்கிறேன் 
நீ வருவாய் என.... 
இரண்டாம் ஆண்டு அஞ்சலி கொண்டாடும் எனது கல்லறையில்..!!!!


காதல் காலாவதி!



என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன் 
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய். 

என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன். 
உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய். 

என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன் 
உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய். 


இறுதியாய்! 

என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய் 
உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன். 

ஆனால்! 

இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை! 
உன் காதல் பயணத்தை முடித்திடவே!


புன்னகையில் கண் படக் கூடாதோ ?



ஹாய் டியர்..... 
உன் ஸ்மையிலுக்கு 
திருஷ்டிப் பொட்டு 
அடர்த்தியான ட்ரிம் மீசை...! 
சூப்பர்டா சூப்பர் கண்ணா ! 
சிரித்துக் கொல்லாதே.... 
சிக்கென்ற பருவப் பையா...!

ஒரு வார்த்தை



எந்த வார்த்தை பேசினால் 
மகிழ்வேன் என்று தெரிந்த அவனுக்கு 
அவன் கூறிய 
ஒரு வார்த்தையில் 
என் கண்கள் குளமாகியதை 
ஏன் உணர முடியவில்லை..


விக்கல்



விக்கல் எடுக்கின்றது... 
தண்ணீர் 
குடிக்க மறுக்கிறேன் .... 
ஏன் என்றால் நினைப்பது - நீயாக 
இருந்தால் 
நிலைக்கட்டும் இன்னும் சில 
நிமிடங்கள்....

வெண்ணிலா




மேகம் ஏறி 
தவழ்ந்து போகும் 
உலகம் சுற்றும் வாலிபன் 

பூமிக்கு 
திருஷ்டி கழிக்கும் 
ஓர் தூரத்துச் 
சொந்தம் 

எனக்கு அன்னமூட்டிய 
என்னவள் காட்டிய 
அலங்காரம் சூட்டிய 
வெள்ளித் தட்டு 

விடியும் வரை 
விளக்கேந்தும் 
இரவு தேசத்தின் 
ஓர் உறவு 

பூமிமகளின் நிழலை 
ஆடைசூட்டிய 
வானத்துப் பால்குடம் 

மேகத் திரையில் 
வானச் சிறையில் 
சாட்டை யறுந்த 
வெள்ளைப் பம்பரம் 

நிலாச்சோறு உண்ணும் 
குழந்தைகளெல்லாம் 
விரதமிருக்கும் 
அம்மாவசை அன்று 

முகவரியை துளைத்து 
தரையிறங்க தவிக்கும் 
விமானம்.


தத்தளிப்பு!!!



அலைகள் வந்து தொட்டுச் செல்லும் கடற்கரையில் 
உன்னைப் பற்றிய நினைவு நுரைகள் ஊறிய 
கரும்பாறையாய் நான்... 

வானத்தின் நீலமும், கடலின் நீளமும் 
ஒன்று சேரும் தூரத்துக் 
காட்சிப்பிழையாய் நீ... 

துடுப்புகளற்ற ஓடமாய் 
நடுவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது 
என் காதல்…!!!

January 06, 2012

காது மடல்...




என்
மூச்சு  காற்று

உன் காது மடலில்
வீ சும் போதும்...
என் நாவால்
வருடும் போதும்
சிலிர்த்தெழுந்து
என் மீது
உரசும்
தானாக
காதணிகளை உதிர்த்து...
என்னிடம்
அதிக முத்தங்களை
உன்
காதுகளும்
வாங்கிக் கொள்கிறது
அத்தனை அழகாய்
சுகமாய்...

உன் கண்கள்...




































விழிகள்
பேசும்
என்பார்கள்..
உன் விழிகள்
என்னை விழுங்கி விட்டதடி...
நானே
உன்னுள் சென்று
என்னை தேடி
கொண்டிருக்கிறேன்...

உன் கண்கள் கூட
கன்னங்களாய் மாறி
என் இதழ்களில்
உரசுகிறது...
உன்னோடு
சுகபடுவதை விட
உன்னில் சுகம் தந்த
உன் கண்கள்
என் உயிரடி...

மூக்கு...




எத்தனையோ பேர்கள்...
முகத்தில்
தன் மூக்கு
பொருத்தமாய் இல்லை என்று
புலம்புவதை
கேட்டிருக்கிறேன்...
உனக்கு
அத்தனை
பொருத்தமாய்
அளவானதாய்...

நீ வரம் பெற்றவள்...
எனக்கு
வரம் தருபவளும் கூட...
என் மீது உரசும் உன்
மூக்கின் நுனி கூட
என்னை
சுண்டி இழுக்குமடி
அந்த நேரங்களில்...

இதழ்...




உன்னிடம்
எனக்கு
அதிகமாய் பிடித்தது
உன் இதழ்கள்...

தமிழின்
எத்தனை வார்த்தைகள்
போட்டு
வர்ணித்தாலும்
அதையும் தாண்டி
அழகாய்
உன் இதழ்கள்...
உன்
மொத்த இதழும்
எனக்கே சொந்தம்...
இல்லை...
இல்லை...
என் இதழ்களுக்கே
சொந்தமடி...
உன் இதழ் நீர் பருக
முடியாமல்
உன் நிழல் படத்தில்
உயிர் பெருகிறேன்
தினமும்
இதழ் உரசி...
உன் இதழின்
இரு ஓரங்களில்
விரியும் இடைவெளி
என் இதழ்களை
உள் இழுக்கும்
காற்றும் நுழையாதபடி
கவ்வி கொள்ளும்...
இது
சுகம் மட்டும் இல்லை...
என்னை சுவிகாரம்
செய்யும்
உன் இதழ்கள்...
வர்ணித்து கொண்டே
இருப்பேன்
உன் இதழ்களின் அழகை
ஒரு நூற்றாண்டு அல்ல...
நான்
ஜெனிக்கும் போதெல்லாம்...

கன்னங்கள்...




கன்னங்கள்
உன்னுள்
உறங்கி கிடக்கிறது
உறவாட
நான் வராததால்....

என் பற்களுக்கும்
என் இதழ்களுக்கும்
சண்டை
ஏற்படுமானால்
உன் கன்னங்களுக்காய்
தான் இருக்கும்...
உன் மிருதுவான
கன்னங்களை
ஒன்று சேர்க்கும்
உன் தாடை
அழகால் தானடி
என் நாவில் கூட
நீர் சுரக்கிறது...
நான் முத்தம்
தந்த பின்
பார்...
உன் கன்னங்கள் சிவந்து
பொங்கி எழும்
சுனாமி போல்
நம்மை
தொலைத்து
நமக்குள் நாம்
சுகமாய்
இணைவோம்
கன்னங்களால்
கன்னம் உரசி......

கழுத்து...




உன்
பின்னால்
நான் நெருங்கி
என் இதழ்களால்
உன் தோள்பட்டைகளில்
பதிக்கும் போது....

என் முத்தங்களால்
வெடிக்கும்
அதிர்வுகளை
உன்னுள் செலுத்தும்
கழுத்தும்
என் நாக்கின் நீளம்
எனக்கே தெரியபடுத்துமடி....
உன்னால்
என்னையே
சில நேரம்
ரசித்து விடுகிறேனடி...

மன்னிக்கவும்...


உன்னை
மொத்தமாய் ரசிப்பதை
முழுதாய்
சொல்ல முடியவில்லை
ஓரிரு கவிதைகளில்...
அதற்காய்
நீ
என்னை மன்னிக்கவும்...

ஆனால்
தண்டனை
தருவதாய் இருந்தால்
உன் இதழ்களால்
மட்டும் நிறைவேற்று
விசத்தை
உமிழ்ந்தாலும்
உண்மையாய்
பருகுவேனடி
முழுதும்...
எல்லாம்
உன் இதழ் மேல்
உள்ள காதலால்...

உன்னை பற்றி...




கோடி அழகு
கொண்டவளே!....
கொள்ளை அழகால்
என்னை
கொண்டு போனவளே!....

உனக்கு யாரடி சொன்னது?...
காதல்
சொன்னதும்
நான்
உனக்கு
உயிர் தருவான் என்று?!...
நான்
நானாய் வாழ
ஒரு நொடி தா...
உன்னை
நான்
காதல் செய்ய....
நான்
காதல் செய்யும்
நீ
யாரடி?!...

நன்றி.




இத்தனை
அழகாய் இருந்தும்
எத்தனை தன்னடக்கம்
உன்னிடம்....

நான் என்னை
காண்பதை விட
நல்ல பண்பை காண்கிறேன்....

உன்னிடம்
நிறையவே
கற்றுக்  கொள்கிறேன்....
என்னை நலமாய்
மாற்றிக் கொள்ள...

நன்றி
உன்
நட்பிற்கு...

அவள் – பயணம்!



எல்லாப் பேருந்துப் பயணங்களிலும்
சேர்த்து வைத்திருக்கிறேன் நிறைய
பயணச் சீட்டுகளில்
உன் பெயரை......

அவள்



நீ கடந்து போன
நந்தவனப் பூக்கள் எல்லாவற்றிலும்
ஒரே வாசம்
திருடியது நீயா ?? பூக்களா ??

நட்பு..




நட்பு ஒரு பிறப்பல்ல. 
அழகிய அவதாரம். 
ஆண்டவன் வரைந்த 
வரைபடம் நட்பு. 
அதி சிறந்த பரிசு 
நட்பு. 
நட்புக்கு நிகர் 
நல்ல நட்பே! 
அழகிய மாடம் நட்பு. 
தூய்மை அதன் அரண். 
மெய்யாய் இருக்கும் வரை 
மெய்க் காவல் நட்பு! 
உன்னை எடை போட 
உன் நட்பு போதுமாகும். 
நம்பிக்கை நாணயம் 
சேர்ந்த கலவை நட்பு. 
துன்பத்தில் சம பங்கு 
நல் நட்பு. 
உன் விழியில் தூசி 
நட்பின் விழியில் கண்ணீர். 
நல்ல நட்பு 
நாட்பட்டே கிட்டும்.

கவி கடிதம்.



அந்த வீண் மீன்களை
உந்தன் காலடியில்
பறித்து போட ஆசையடி
தினம் ஓர் கவி உனக்கு
அனுப்புவதா கடினம்
நித்தம் நித்தம் ஓர் கவி
உந்தன் துயிலை கலைக்கும்
அதில் எந்தன் உயிர்
பதிந்து இருக்கும்  பெண்ணே...

இதயம்.




பெண்ணே
உன் இதயத்தை தருவாயா
என் இதயம்
என்னுடன் தினமும்
சண்டை போடுகிறது
உன் இதயம்
வேணும் என்று...

பெண்கள்.




பெண்கள் 
சொல்வது ஒன்று 
செய்வது ஒன்று 
நான் அவள் காதலன் 
ஆக வேண்டுமென்று 
கேட்டேன் கவிஞன்
ஆகிவிட்டாள்....

காதலியே.....




நீ தூங்குவதற்கு சரியான இடம் 
என் இதயம் எனின் 
நிறுத்திவைப்பேன் என் இதய துடிப்பை
நீ கண் விழிக்கும் வரை....

உறவுகள் தந்த வலிகள்.




பற்றில்லாத நெஞ்சங்கள் 
தருகின்ற துன்பங்கள் 
எழும்பாத‌ கண்ணீராய் விழுகின்றதே 
பொய் பித்தர்களின் 
உன் உறவுகளின் அன்பு 
பாசங்கள் என்றுமில்லை
நீ கத்தியழ இனி சக்தியில்லை 
அட ஏனோ இந்த நிலை 
சிறகு உடைத்தது ஒரு பறவை 
இனி இறங்கிடும் இவள் சிலுவை
உலகே உலகே திறந்திடு புது கதவை!!!!!!

எதற்காக?




என் ஆன்மாவைத்தொட்டவளே !
என் மனதில்
முத்திரையிட்டவளே ! !
எதற்காக என்னைக்கெடுத்தாய்?
அதற்காகவா ?
உன்னைக்கொடுத்தாய்?
அமைதியாய் ஒருமுறை
உன்னை - நீ
ஊமையென்றாய்
அடுத்ததாய் .....
உன்னை - நீ
செகுடுமென்றாய்
எதற்காக தடுமாற்றம் ?
என்னிடத்தில் - உன்
"மனம்" மாற்றம்.
என்னை - நீ
புரிந்து கொள்ள .....
நீ எடுத்தாய் - சில
காலம்.
அதற்காய் - நானும்
காத்திருந்தேன்
சமகாலம்.
உன் நிலையை
புரிந்தேன் நான்
அதனால்
காத்திருக்கிறேன்
அடுத்த ஜென்மம்வரை
எதற்க்காக?
எ(ம்)(உ)ன் காத்திருப்பு.....
நீ என்மேல்
நான் உன்மேல் - கொண்ட
காதலுக்காய்.

கண்ணீரில்.




காதல் வந்தால்
உயிர்கூட சேர்ந்துவிடும்
உயிரோடு...
மௌனத்தை நேசிக்கும்
நீ காதலை நேசித்துப்பார்
காதல் உனக்காக
காவல் இருக்கும்
பூவை நேசிக்கும் நீ
முள்ளை நேசித்துப்பார்
முள் தான் பூவின்
உயிர் என்று அறிவாய்
அவளை நேசிக்கும் நீ
உன்னை நேசித்துப்பார்
அவள் உனக்குள்
இருப்பதை உணர்வாய்
கவலையை மறந்து
கண்ணீரை நேசித்துப்பார்
கண்ணீரிடம் துன்பம்
தோற்று விடும்.....

நீ தான் குட்டி!




நீ மட்டும் போதும்
உன் நினைவுகளே போதும்
என் கனவெல்லாம் உன் பூமுகம்
என் உலகே உன் மடிதான்...
உன் கூந்தல் என் பூந்தோட்டம்
உன் பூவிழிகள் என் பூலோகம்
உன் புன்சிரிப்போ என் பொக்கிஷம்
உன் பூவிதழ்கள் என் செல்வம்
நீ எந்தன் செல்லக்குட்டி !
நடக்கும் நந்தவனம் நீ
நான் கண்ட பெண்தெய்வம் நீ
எனை ஆளும் தேவதையே நீ
உனை நாளும் நான் சுமப்பேன்
என் இதயம் உன்பேர் சொல்லியே
கடிகாரமாய் துடிக்கின்றதே
அடிபெண்ணே நீதான் எந்தன்
ஒருதாரம் ஜென்ம ஜென்மம்!!!

என் உணர்வுகள்.




மறப்பதற்கு முயற்சித்த‌
போதெல்லாம் நீ
எனக்குள் பிறப்பதாய்
உணர்ந்து கொண்டேன்
விழியோரம்.....
கரையொதுங்கும் நீரில்
உன் ஞாபகங்களை
கழுவ நினைக்கிறேன்
தோற்றுப்போய் நிற்கிறதடா
என் இதயம்
சாபங்களாய் போன
உன் நினைவுகளின்
சோகங்களைச் சுமந்தபடி

ஒற்றுமை வற்றிவிட.




திரையும் திரையெழு கடலும் கடலிடை
தினமும் எழுகதி ரொளியும்
தரையும் தரைதொடு அலையும் அலைபுனல்
தரவிண் பொழிமழை முகிலும்
மிரையும் அதனுடை ஒலியும் இடியொடு
முழங்கு விரிசுழல் புயலும்
விரையும் பெருகிடப் புகும்நீர் இயற்கையின்
விளைவே எனில் உயிர்கொல்லும்
மரபும் மரபுடை மொழியும் மொழிசொலும்
மனிதர் அவருடை மனமும்
கரவும் கயமைகொள் உறவும் உயிரினைக்
கருதா இறைமைகொள் ளரசும்
பரவும் பெரிதெனும் உலகும் உலகிடை
பலதோர் குடிகளும் அவர்தம்
தரமும் தயவுடை இயல்பும் தாழ்ந்திடுந்
தருணம் வர உயிர்கொல்லும்
உதிரம் பெருகிடு நிலையும் நிலைதனை
உருவாக் கிடுமொரு சிலரும்
அதிரும் சடபட வெடியும் வெடியுற
அவலம் தொடரழு குரலும்
உதிரும் பலதர உடலும் அழிவுற
உலகம் விழிகொள்ளும் மௌனம்
எதிலும் அவர்தனி நலமும் நலம்பெற
விழையும் செயல் உயிர்கொல்லும்
மயிரும் இழந்திட உயிரும் விடுமான்
மனதை யுடைமா தமிழன்
பயிரும் பயிரிட விளையும் அதனுடை
பயனால் தனதெழில் மனையும்
உயிரும் பரிவுடை குணமும் பலமுறு
உடலு மதுகொளும் திடமும்
வயிரம் எனும்வெகு திறனும் மதியுற
வாழ்ந்திட ஏதுயிர் கொல்லும்?

அந்த நொடிப் பார்வை...


உன் கூர்மைப் பார்வையில்
என்னிதயத்தைக் கீறியவளே
அது சுகப்படவும்
வழியைச்சொல்லிவிடு
அந்நொடிப் பார்வையில்
சிறகடித்து பறக்கிறது மனசு - அது
சேரவழியின்றியும் தவிக்கிறது - உன்
இதயவறையை திறந்து கொடு - அது
சேருமிடமும் அங்கேதான்......
அந்த நொடிப் பார்வையால்
இன்னிதயத் தவிப்பை ஏதோவொரு
இதமான அலைவரிசை
அசைபோட்டுக்கொண்டேயிருக்கிறது
நேரத்தில் நொடிகள் பிந்தினாலும்
பிந்திய அந்நொடிக்குள்ளும்
உன்னை நினைக்க - என்
மனம் மறப்பதில்லை
வாழ்கின்ற ஒவ்வொரு நொடிகளும்
என்னிதயத்தை நசுக்குதே
நான் இப்போதெல்லாம் நேசிப்பது
அந்தவொரு நொடிப்பொழுதையே...
உனக்கென்ன - நீ
எய்த அந்தவொரு பார்வை
என்நெஞ்சையல்லவா
குத்திக்குடைகிறது
பெண்ணே!
எனக்காய் ஒரு நிமிடமெடு!
உனக்காய் வாழும்
என்னையறிந்து கொள்ள!
நானின்று வாழ்கிறேன்
அந்தவொரு நொடியிலேயே
பிந்திய பொழுதுகளில் - நான் வாழ
எஞ்சிய நிமிடங்களை
உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்
விடைகொடு!
உன் கண்ணை நீ மறைத்தால்
நீயே மறைந்து விட்டதாய் ஆகுமா...?

Blog Archive

miCroSerViceabiE. Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger