2011 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

December 24, 2011

உன்னையே சரண்டைகின்றேன்.




வானில் தோன்றும் அழகிய நிலவே
நீ வானை விட்டு மெல்ல பூமிக்கு வந்திடாயா என
அந்த அழகை ரசிப்பவர் மனந்தனில் ஏக்கம்
என்னவளே
ஏனோ இன்று அந்த வான் நிலவாகவே தெரிகின்றாய் நீயும்
என் கைதனில் கிடைப்பாயா என
என் மனந்தனில் ஏக்கம்!
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நீ காட்டும் தூய அன்பு
இன்று என்னை உன் முன் சரண்டைய வைத்தது
உன்னிடம் பழகும் இந்த அழகிய நாட்களை எண்ணி
என் மனமோ வானில் பறக்கிறது
உன் மன்னிக்கும் குணம் இந்த
இயற்கையிடம் கூட நான் பார்த்த்தில்லை
ஒரு பெண்ணிற்குள் இத்தனை அழகா..?
வியப்பின் விளிம்பில் நான் இன்று.!
ஒட்டு மொத்த உறவுகளின்
மொத்த அன்பும் உன் ஒருத்தியிடம்!
நானும் அதிஷ்ட சாலி தான்
என் பிறப்பின் அர்த்தத்தை உணர்கிறேன்
இன்று உன்னை சரணடைந்தவனாக

காதல் தேசத்து அகதி.



என் இதயத்துக்குள்
இன்னொரு இதயம்
சுகமாய் வீழ்ந்த
அந்த நொடிப் பொழுது
அவன் சுவாசம்
எனைத் தீண்ட
என் மனது காதலை
பூத்த அந்த நாழிகை
அவன் பார்வைகளால்
என் இதயத்துக்குள்
சித்திரம் வரைந்த
அந்த மணித்துளிகள்
அவன் நினைவுகள்
என் மனதுக்குள்
இறங்கிய தருணங்கள்
இவை எல்லாவற்றையும்
நினைத்திடும் பொழுது
அவன் நினைவுகள்
உயிர் பெற்று
என் பொழுதுகளை
அவிய வைத்து பசியாறிக்
கொள்கின்றது இரக்கமின்றி..
அவன் நினைவுகள்
என் இதயத்தை
தீண்டி விடாமல் வேலி
போடுகின்றேன் இருந்தும்
அவன் நினைவுகள்
இதயத்தை தாண்டி
என்னை முழுவதும்
ஆக்கிரமித்து படர்கின்றதே
ஒரு வேளை அவன் நினைவுகள்
பாதீனியம் போலவோ?
நான் அழிக்க அழிக்க
மீண்டும் முளைக்கின்றதே
என் காதல் தேசத்தில்
நான் மட்டும் தனியாக
அவன் நினைவுகளை
தினம் தினம் சுமந்து
காதல் அகதியாக வாழ்கிறேன் ...

உன்னவள்....!!



நீயில்லாத பொழுதுகள்
ஏதிலியாய் நகர...
உன் நினைவுகளும் இம்சிக்க ..
இரவுகளும் பகல்களாய்...
ரணமாய் கடந்து செல்ல....
நீ வருவாய்!
என் துயர் துடைப்பாய்!
எனை அணைத்து..
இமை தழுவி
இன்பம் சேர்ப்பாய்!
என...
என் ஏக்கங்களை
ஆற்றுப்படுத்தி..
உனக்கான நிஜம் தேடி
காத்திருக்கிறேன்..
வந்துவிடு என்னவனே....
உன்னவள் என்றும்
உனக்காகவே.......!

சாமியோ நான் வாழும் பூமியோ



சுனாமி அடித்ததன் அதிசயம்
நீ கோபப்பட்டதன்
விசித்திரம்
புயல் வீசினால் எண்ணிக்கொள்வது
புரியாத உன் அனல்
பார்வைகள்
காட்டுத் தீ ஆரம்பம்
உன் விழியோர
ஸ்பரிசங்கள் தான்
உன்னை சுவாசித்து  முடிந்ததும்
யாசிப்பது  முத்தப்
பரிசில்கள்  தான்
சுறாவளி  அடித்தவுடன்
சுகங்கள்  மட்டும்
எனக்குப் புரியும்
சுழன்றடிக்கும்  அதற்கு
வேகம் கற்பித்தது உன்
கால்களென தெரியும்
தொடர் வறட்சி
மத்தியிலும் நிற்காது
தொடருமுன் காதல் மழை
என்றும் குறையாது தருகிறாயே
பெண்ணே நீ சாமியோ
நான் வாழும் பூமியோ?

என் தேவிக்கு ஆராதனை.


என் இதயத்தில் அமர தீபமாய் வந்திறங்கி 
என் இருண்ட மனதில் ஜீவ ஒளியாய்  ஜொலிக்கும்
என் இதயம் எனும் கோயிலில் தீபசுடராய்
சுடரும் என் ஜோதி நீயே
என்னுள் இருந்து கொண்டே 
என்னை இல்லாமல் ஆக்குகிறாய்
என்னுள் கரைந்து கொண்டே 
என்னை காணாமல் ஆக்குகிறாய்
உன் ஜீவனால் என் ஆத்மாவை ஊதி
என்னை எனக்கே திருப்பி தந்தாய்
என் வாழ்வின் விடி வெள்ளியாய்
என் கனவுகளின் இராணியாய்
என் கற்பனைகளின் அரசியாய்
என் நினைவுகளின் சுமைதாங்கியாய்
என்னை ஆட்சி புரிபவளே
என்னுள் தேவதையாய் வந்தவளே
வசந்தத்தை பொழிபவளே
என் மனதை என் உயிரை
காக்கும் தேவி நீ
என் உள்ளத்திள் உயிராய் கலந்த
மூச்சும் நீ யே தேவி..
உன்னைப் பாட திருப்பா இல்லை
என் உயிரினை பாடலாய் கோர்கிறேன்
உன்னை பொன் நகையால் அலங்கரிக்கவில்லை
புன்னகை கொண்டு அலங்கரிப்பேன்
வானையே பட்டாய் உடுத்தி
வெண்ணிலவை பூவாய் சூட்டி
மலர் தூவி அல்ல என் மனதில்
பூத்த பூக்களால் தூவி
பால் சந்தனம் நெய்களால் அல்ல
என் இரத்த நாளங்களால் அபிசேகம் 
நடத்தி உன் பாதங்களில்
என் ஜீவனை தீபமாய் கரைத்து
என் ஜோதி நீ என்று 
இதயத்தினுள் பூட்டுகிறேன் உன்னை
என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்
இருந்தும் எதுவும் அலுக்கவில்லை
உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்
ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்
என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்
என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி
சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி
உன்னை சரணடைந்தேன்...
என் தேவி..........யே..

உயிர் உள்ளவரை வாழும்.










ஊர் புகழும் பட்டப் படிப்பு 
படிக்க போன மங்கையே இன்று
நம் உறவு பிரிக்க உன்
உறவு வந்த மாயமென்னவோ
சோறு பொங்க உலையும் வைத்து
காத்திருப்பேன் என்று சொன்ன மங்கையே
இன்று கண்கள் பொங்க
கதறுகிற பாவினானம்மா
கையில் ஒன்று மடியில் ஒன்று
பெத்து தருவேன் என்று சொன்ன மங்கையே
இன்று காதலனாய் நானழும்
கதையும் கண்டோ
தாலிகூட மஞ்சள் கயிறு என்று
சொல்லி மகிழ்ந்த நாமளை
அன்பு எனும் மாய வலை வீசி
மடக்க நினைக்கிறதை நீயும் அறிந்ததுண்டோ
கர்வத்தில் நான் இதை எல்லாம்
சொல்லவில்லை கண்ணே கண்ணீரோடு
கலந்த கவிதையில் சொல்கிறேன்
உன் உறவு வேண்டி
உனக்காக பல கவிகள் நான் வடித்தும்
உன் உறவுகளுக்கு இன்னும் புரியவில்லையே
உன்னை பார்த்து வந்த காதலல்ல
உன் உளம் அறிந்து வந்த காதல்
உயிர் உள்ளவரை வாழும் என்பது...  

May 24, 2011

உன் குரல்.


svrpamini




உன் குரலை கேட்டாலே

உதிரத்தில் அலையடிக்கும்..


உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்

எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..

என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்

என் காதும் உனக்கு கருவறைதான்..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..

என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன...
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...

உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
என் வாழ்வின் இனியவனே?

pamini

காதல் சாலையில்



காதல் சாலையில் நான் பயணிக்கும் போது
உன்னையும் என்னையும் நம் வாழ்க்கையையும் பற்றி
ஆயிரம் கனவுகள் வளர்த்தேன் கலைந்து விடாமல்..

ஆனால் நீயோ வார்த்தை என்னும் கூரிய ஆயுதத்தால்
என் கனவுகளை சிதைத்து விட்டாய்
உன்னால் எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு
என்னிடம் மன்னிப்பு கேட்காதே ஏன் என்றால்
உன்னை என் மனதில் குழந்தையாய் சுமக்கிறேனடா
கோழி மிதித்து குஞ்சு ஒரு போதும் இறப்பதில்லையடா

ஆனாலும் நான் ஆசையாய் வளர்த்த
என் கனவுகளை வார்த்தைகளால் கொலை செய்தாய்
இன்று என் கனவுகள் நினைவுகளில்
குற்றுயிராய் மரணித்து கொண்டு இருக்கின்றது
என் கனவுகள் மீண்டும் உயிர் பெற வேண்டுமா??
உன் இதயமும் அன்பான வார்த்தைகளும்தான்
என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் மருந்து

தயவு செய்து புரிந்து கொள் என் நினைவில் வாழும்
கனவுகளை கொன்று கொலைகாரன் ஆகிவிடாதே.
Svr.pamini


                                                                                   கயந்தன்.........

வேசங்கள்


svrpamini
வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள்
எல்லாம் வேசங்கள் என்று நினைத்தவள் மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..



காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்

வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...
சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில்
வாழ வைக்க போராடுபவனே
உன் அன்பினில் என் தாயை காண்கிறேன்..

 உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்.
என்னோடு சண்டை பிடிக்கும் போது
உன்னை குழந்தையாய் காண்கிறேன்..

இப்படி காணும் யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்று
விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை
மற்றவர் அனுபவிக்க விட
நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல.


Photobucket

முதல் முறை

svr.pamini

முதல் முறை உன் குரல் கேட்ட.. 
அந்த நிமிடங்களில்! என்னை மறந்து 
உன் குரலில் தொலைந்தே போனேன்..! 
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து 
உன் குரல் தொடுத்த இனிமையான 
அன்பான பண்பான வார்த்தைகள் 

என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..! 
உன் குரல் மட்டும் கேட்க்காமல் போய் இருந்தால் 
என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா! 
வர்ணிக்க வார்தைகள் தேடி அலையும் பேதை நானடா.! 
உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்! 
விடுதலை பெற விருப்பமில்லாமல்.. 
உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக 
வாழ அடம் பிடிக்கிறது...! 

என் உறவென உனை மாற்றினாய்! 
விழி வழியே உன் உருவம் நகல் எடுத்தது 
நித்தமும் பார்க்க வைத்தாய்.! 
என் இனியவனே உன்னிடம் அடிமைப்பட்டு 
வாழ்ந்திட ஏங்குது.. இந்த பெண்ணின் மனம்.......! 



                                                                      கயந்தன்.......

கற்பனையில்

கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும்
என்று தெரிந்தும்
கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!
 

தொலைந்து போனது வாழ்க்கை
என தெரிந்தும்
தொலைதுர பயணமாய் வாழ்க்கை நகருது..!

இதில் என்றோ ஒரு நாள் போகும் உயிர்
இன்று போனால் என்ன என்று கேட்க்கும் மனது
இவை எல்லாம் முற்று பெறும் நாளை......



                                                                      கயந்தன்........

கண்டேன்

Svr.pamini



கண்டேன் கண்டேன் என் காதல்
பெண்ணின் அழகை கண்டேன்
சொன்னேன் சொன்னேன் என் காதலை சொன்னே
நான் நான் பார்க்கும் போது பார்வையாகிறாள்
நான் பேசும் போது பேச்சாய்யாகிறாள்
அழகு விழிகளால் எனை சிறையெடுக்கிறாள்
புதிதாய் மலரும் மலரென எனை மாற்றினாள்
தொலையாமல் தொலைந்தேன் நானே
உறையாமல் உறைந்தேன் உன்னுள் நானே.....



                                                                   கயந்தன்.........


                                  

ஆண்! பெண்!



பெண்!
உன்னைப் பார்த்த சில நொடியில்
என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா
மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட
ஏனோ என் கண்கள் துடிக்குதே
காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று
என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே

என் உணர்வினில் கலந்து உயிரினில் மிதந்து
நினைவினில் துளிர்த்து என் காதலில் பிறந்தவனே
என் காதல் புரியவில்லையா?
அறிந்தும் அறியாதவனே
புரிந்தும் புரியாதவனே
புலம்புகின்றேன் புரியவில்லையா?
எந்தன் காதல் உனக்கு தெரியவில்லையா?

ஆண்!
அறிந்தேன் பெண்ணே அறிந்தேன்
புரிந்தேன் கண்ணே புரிந்தேன்
புலம்ப வேண்டாம் பெண்ணே
உந்தன் காதல் வேண்டாம் கண்ணே
வரும் காலம் யாவும்
கண்ணீர் துளிகள் வரவாகுமே
துன்பங்கள் தொடராகுமே
இன்பங்கள் தொலைவாகுமே
உன் காதல் சில நாளில்
தேய் பிறையாகி போகுமே
என் காதலும் வேண்டாம் பெண்ணே
உன் காதலும் வேண்டாம் கண்ணே...



                                               கயந்தன்.........

நண்பனே!

svrpamini

ஓ நண்பனே ..!!!
உறக்கத்தை மறந்த உன் கண்கள்
பூமியில் எதை தேடுகின்றன..?
புதைந்து போன வாழ்வையா..?
புதிர் போடாதே நேற்றைய கனவில்
நாளைய கற்பனையில் இன்றைய
வாழ்க்கையை தொலைத்து விட்டு
தேடினால் கிடைக்குமா நண்பனே.. ?

விளக்கொளியை கண்டு விரைந்து மடியும்
விட்டில் ஆகிவிடாதே நண்பனே..
தோல்வியை கண்டதும் தூக்கு கயிற்றை தேடாதே
அவ நம்பிக்கையை ஆறடிக்குள் புதைத்து விட்டு
தன்னம்பிக்கையை மன அரங்க்குள் விதை..!!!

அந்த பூக்கள் பூப்பறிப்பவனை கண்டும்
புன்னகை பூக்கின்றன....!!!
மரம் வெட்டிகளுக்கு கூட அந்த மரங்கள்
நிழல் தருகின்றன ..!!!
அந்த கடலின் அலைகள் தோற்று போனாலும்
மீண்டும் கரையை அடைய போராடுகின்றன..!!!..

ஆனால் நீயோ உனக்கே பாரமாய் இருக்கின்றாய்
தோல்வியை கண்டதும் துவண்டு விடுகின்றாய்
இருட்டில் இருந்தது போதும் வெளியே வா
நாளைய பொழுது நிச்சயம் உனக்காய் விடியும்
நம்பிக்கையோடு நடை போடு
நாளை உலகம் உன் கையில்..!!! 



                                                     கயந்தன்.........

கலையில்

Svr.pamini

காலையில் பூத்த பூ மாலையாகும்
முன் வாடி மயங்கி விழுகுது ஏன் ?
நடமாடும் மொட்டாக உனை
கண்டுதான் பெண்ணே.

  
                                கயந்தன்........

நினைவுகள்

svr         

உன் நினைவுகளை
தினம் தினம் சுமந்து
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து
நான் பெற்ற குழந்தைகள்
என் கவிதைகள்...

               கயந்தன்.......



                                                                                                                                                                      

                                   
 
                                             
 

பாசம்


Photobucket

பாசம் என்னும் பூந்தோப்பில்
காதல் என்னும் பூ
ஒருமுறைதான் பூக்குமா
தெரியவில்லை எனக்கு

ஆனால் மழையில்லாத நந்தவனமாய்
இருந்த வாழ்வில் நீ மழையாக வந்து
வரண்ட என் இதயத்துக்கு
நீர் ஊற்றி காதல் பூ பூக்கவைத்தாய்.!!!.

என் காதலை அடி மனதுக்குள்
ஆழ புதைத்து விட்டு
சாதாரண மனுசியாக வாழ நினைக்கின்றேன்..

ஆனால் உன் குரல் கேட்டால்
என் மனதுக்குள்
கோடி மத்தாப்பூக்கள் பூக்கின்றன!!!
வரும் காலத்தில் வேதனை என்னும் முட்கள்
என் மனதில் ரணங்களாய் குத்தும்
என்றும் தெரிந்தும் முட்கள் நிறைந்த
பாதையில்தான் நான் பயணிப்பேன்
என்று என் மனம் துடிக்கிறது..

வேதனைகள் மட்டும் சோதனைகள்
ஆகிப்போன வாழ்வில் சாதனைகள் செய்ய துடிக்கும்
இவள் வாழ்வில் மீண்டும் சோதனைகள்தான்
வாழ்க்கையாகி போகுமா.?
விடை தெரியாதா பதிலாகி போன
என் வாழ்வில் கேள்விகள் மட்டும்
வர்க்கத்தில் விரிகின்றது

வினாக்கள் யாவும் கனாக்களில் பதில் சொல்ல
என் காதலையையும் கனாக்களில் சொல்லிவிட்டு
காலத்தை கரத்து கொள்கிறேன்
வரும் ஜென்மத்திலாவது
உன்னோடு நான் சேர்ந்து வாழ்வேனா...?

                                                                                  கயந்தன்........

வார்ததை



Svr.pamini




நீ என் மீது வீசும்வார்த்தை 
கற்க்களால் என் இதயம் 
வெடித்து விடுகிறது 
இரக்கமில்லாத அரக்கன் 
நீயடா..

               கயந்தன்.......

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger