05/11/11 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

May 11, 2011

அதி காலை



உன் அதிகாலைப்பறவைழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது. நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்.




                                                         கயந்தன்...........

உன்னழகு

Oh__It_Is_Love__by_little_pretty


ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது 
உன்  அழகு.!


                               கயந்தன்.........

குளிர்



மிதமான குளிரில் பருகக் கிடைக்கும் ஒரு 
கோப்பைத் தேநீர் போன்றது காதல். அதன்
 சுகம் அலாதியானது. அதிலும் முதல் காதல்?
 வாழ்வின் விளிம்பு நிலை வரை நம் மனதை 
விட்டு அகலாத ஒரு சுகமான சுமை அந்த முதல் காதல்.
 இந்த ஓராண்டுக் காலம் ஓரளவு நிம்மதியாய்
 வாழ்ந்து விட்டு வாருங்கள் உங்களை பிறகு
 பார்த்துக்கொள்கிறேன் என்று விதி எங்களை 
 வழியனுப்பி வைத்த காலம் அது.
 மேலிதழின் மேற்புறம் அரும்பும் மீசையோடு,
 சக வயது பெண்களை கண்டால் உள்ளுக்குள் 
ஏதோ வலி ஏற்படும் பருவம் அது.

                                                             கயந்தன்.........

கல்லூரி

       
கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.


காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.
காதல் - விளக்கம் சொல்ல முடியாத விடயம.;
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - ஒரே உறவுக்குள் உலகத்தை உணர்தல்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம.
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - ஹோமோசேபியனின் முதல் கவிதை.
காதல் - கூர்ப்பின் முதல் இலக்கியம்.
காதல் - இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல் - இன்னொருவரால் உணரவும்...


                                                                                         கயந்தன்..........
வீட்டை விட்டு புறப்படும் பெண்ணே!
நீ அழகாய் இருக்க வேண்டும் என்பதற்காக
எத்தனை பெரிய சுமையை
ஏற்றிக் கொள்கிறாய் தெரியுமா?
நீ போடும் அத்தன ஒப்பனையும்
உன்னை கட்டுப்படுத்துவதை நீ உணர்வாயா?
கண்களுக்கு தீட்டிய மை கரையாமல் . .
உதட்டின் சாயம் சிதையாமல் . . .
சீவிக் கட்டிய கூந்தல் கலையாமல் . .
விலை உயர்ந்த சேலை கசங்காமல்
இன்னும் சன நெரிசலில் நீ அணியும்
அலங்காரப் பொருட்கள் தவறிப் போகாமல்
எத்தனை கவனம் எடுக்க வேண்டி இருக்கிறது பார்த்தாயா?
ஆண்களின் ஆதிக்கத்தை நீ வெறுப்பதை ஆதரிக்கும் நான்
அலங்காரத்தின் ஆதிக்கத்தை ஏற்றுகொள்ளும்
உனது அறியாமையை நான் ஆதரிக்கவா மறுக்கவா?
பதில் தருவாயா?





நீ
ஆசைபட்டபொருட்கள்
எல்லாவற்றையும்
வாங்கி பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு ஆசை
வந்துவிடும் என்ற நம்பிக்கையில் 
                                                             by.kajanthan

அடுத்த ஜென்மத்திலாவது நீ
போடும் செருப்பாக பிறக்க
வேண்டும் நான்
அப்போதுதானே என்னை
பிடித்து உன்னை காதலிபவனுக்கு
அடிப்பாய்
                                           by.seralathan
நான் உன் கைக்கடிகாரமாய் பிறந்திருக்கலாம்
நீயாக எனை பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது என்னை
பார்க்க வைத்திருப்பார்கள்

                                                            by.seralathan

என்ன செய்வது.

































என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலனாய் பிறந்து
விட்டேன்.

                  

நீ ஆகாயத்தில்





















நீ ஆகாயத்தில் பிறக்கிறாய்
பூமியில் சிலிர்க்கிறாய்
வானவில்லை தோன்ற வைக்கிறாய்
தொன்றுதொட்டு எங்களை நேசிக்கிறாய்
நீ குறைவாசியாக இருந்தால்
ஏன் ஏழை விலைவாசியில் தவிக்கிறான்
தொலை தூரத்தில் இருந்தாலும்
என் மனம் துரத்த வைக்கும்
அழகான மழைத்துளியே!
                                           

நெற்றிப்பொட்டாக












நான் உன் நெற்றிப்பொட்டாக பிறந்திருக்கலாம்
கொஞ்ச நேரமாக இருந்தாலும் உன்னை பார்க்க
வைத்த பெருமையோடு உன் கையாலே இறந்து
போயிருப்பேன்.

                               

சிரிப்பு

நீ சிரித்துக் கொண்டே
இருந்த உன் நிழல்படம்

அழகான கையெழுத்தோடு
உன் வாழ்த்து அட்டைகள்

எழுத்துக்களை மிச்சம்பிடித்து
நீ எழுதியனுப்பிய கடிதங்கள்

ஆழமாக அழுத்தி அழகாக
எழுதிய உன் கவிதைகள்

உன் அவசர மின்னஞ்சல்கள்
உன் ஆறுதல் குறுந்தகவல்கள்

இப்படி நீ அனுப்பிய
அத்தனையும் அன்று
நான் அழித்துவிட்டு
வீரனாய் பெருமை
கொண்டபோதும்

இன்றும் என்னால் உன்னை
என் இதயத்தில் இருந்து
இறக்கமுடியாமல் போவதில்
கோழையாய்த்தான் வாழ்கிறேன் 

                                                                 கயந்தன்..........
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger