05/14/11 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

May 14, 2011

உறையும்


விரல்கள் உறையும் வினாடிககளில்
ஆறாவது விரலின் புகையினோடு 
பரவும் எதோ நினைவுகள்
ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்தோடும்
 ஈரத் துளிக் கோலங்கள்
விழி முனைகளில் உதிர்ந்து விழும்
 கனவுகளின் மிச்சங்கள்
இலைத் தொலைத்த மரங்கள் 
கருகி தொங்கும் கிளைகள்
இதயச் சுவர்களில் மெல்ல படியும்
 வெறுமையின் எச்சங்கள்
வீதியோரம் வெளிறிய 
புற்செடிகளின் நடனங்கள்
தூரச் சூரியனின் கதகதப்பு 
தேடும் தேகத்தின் தாகங்கள்
இணைத் தேடும் பறவையின்
 காதல் பரபரப்பு இனம் புரியாத 
எதோ ஒரு பரிதவிப்பு
அந்தியில் பூக்கும் 
பனிதேசத்து வானம்
மனதோரம் அழுத்தும் 
ஒரு வித பாரம்
மேகம் போர்த்திய விண்வெளி
தூக்கம் கலைந்த பின்னிரவு
கட்டியணைத்து காமம் 
தெளிக்கும் குளிர்
கசங்கிய போர்வைக்குள் 
தீயென தகிக்கும் தனிமை
முத்தமிட்டு மோகம் 
விதைக்கும் பனிக்காற்று
தொட்டு விடும் தூரத்தில் என் ஆசைகள்
சில்லென சில்லென பனிமழை....
இன்னொரு இரவு....இன்னும் நீளுகிறது....
பனித்தேசத்தின் பக்கங்கள் 
கையொப்பம் கேட்க...
வெற்று தாளாய் இந்தப் பக்கமும் 
புரண்டு ஓடுகிறது...
                                                                                                      
                                         கயந்தன்..............

சத்தியம்

முள்ளானலும்
மலரானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் பாதையில்
மட்டுமே
சாத்தியமாகின்ற
விந்தை.


அடிகளானாலும்
முத்தங்களானாலும்
சரி நிகர் சமானம்.
காதல் போதையில்
மட்டுமே
சத்தியமாகின்ற
வித்தை...

               கயந்தன்............

வார்த்தைகளில்

 
























வார்த்தைகளின் கீறலில்
பதிந்து நிற்கும் ரணங்கள்...


மௌனத்தின் கனத்தில்
சூழ்ந்து சுழலும் பயங்கள்...


சிந்தனைகளின் சத்தத்தில்
உதிர்ந்து விழும் உணர்வுகள்...


நாளதன் ஓட்டத்தில்
நலிந்து மறையும் சினங்கள்...


ஊடல் மடியும் கணத்தில்
வான்வரை வியாபிக்கும் காதல்....


இனிமையான
இன்னுமோர் உலக அதிசயம்!


                                                   கயந்தன்...........

வார்த்தைகளில்





























வார்த்தைகளின் கீறலில்
பதிந்து நிற்கும் ரணங்கள்...


மௌனத்தின் கனத்தில்
சூழ்ந்து சுழலும் பயங்கள்...


சிந்தனைகளின் சத்தத்தில்
உதிர்ந்து விழும் உணர்வுகள்...


நாளதன் ஓட்டத்தில்
நலிந்து மறையும் சினங்கள்...


ஊடல் மடியும் கணத்தில்
வான்வரை வியாபிக்கும் காதல்....


இனிமையான
இன்னுமோர் உலக அதிசயம்!

                                                            கயந்தன்............

ரோஜா


நந்தவனச் சோலையில்
பதமான சூழலில்
இதமான நறுமணத்துடன்
வானவில் நிறத்துடன்
ஆயிரமாயிரமாய்ப்
பூத்து நிற்கும்
ரோஜாக்கூட்டமாய் உறவுகள்..


பாலைவனச் சோலையில்
பதப்படுத்தப்பட்ட சூழலில்
மிதமான மணத்துடன்
சிவப்பு நிறத்துடன்
தனிமையில்
பூத்துச் சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்க் காதல்...


                                                            கயந்தன்..........

கண்ணீர்

சற்று கண்ணீர்துளியென்றாலும் 
சிந்திவிட்டு செல்!..... இத்தனை வருடமும் 
உன் நினைவுகள் என் இதயத்தை வருடியது
 இன்னும் எத்ததை வருடங்கள் காத்திருக்க 
உன் வருகைக்கு!..... என் ஜீவன் போகும் வரைக்கும்
 உன்னுடய நினைவுடனே வாழ்வேன்
 இந்த பூமிதனில் என் ஜீவன் பிரிந்த 
செய்திதனை கேட்டேனும் 
என் உடலை பார்க்க வருவாயா?... 
வரும்போது என்னுடய உள்ளங்கைள்
 விரிந்தே கிடக்கும் சற்று 
கண்ணீர்துளியென்றாலும் சிந்திவிட்டு செல்!.....


                                                                                          கயந்தன்............

நிகழ்வு





நிகழ்வுகள்
கிடுக்கிப்பிடியில்
கழுத்தை நெரிக்கும்.


காதல் கொள். அது
கழுத்து நீவிக்
கவலைகள் சுத்திகரிக்கும்.


உணர்வுகள்
உடலெங்கும் ஊசிகள் குத்தும்.


காதல் கொள்.  அது
ஊசிகள் பிடுங்கி
உபாதைகள் நீக்கும்.


குழப்பங்கள்
கடலில் அலையெனச்
சுழன்று தொடரும்.


காதல் கொள். அது
எதிர்நீச்சல்
கற்றுக் கொடுக்கும்.


வாழ்வில் வெற்றி கொள்ள..
வாழ்வை வெற்றி கொள்ள...
காதல் கொள்.


                                கயந்தன்............
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger