05/10/11 - miCroSerViceablE.com
Headlines News :
WWLCOME THIS MY SITE
எமது இணையத்தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிகுந்த நன்றிகள்

May 10, 2011


காதல் இயற்கையானது

ஒரு மலரின் அழகும்
யார் கண்ணுக்கும் புலப்படாத
கதிரவனின் முதற் கதிரும்
...எங்கே ஆயினும், வளிமண்டலத்தில்
அந்த தென்றல் பிறந்த இடமும்
இந்த காதல் உணர்வினால்
பேரின்பம் அடையட்டும் !!!
இருட்டில் நடக்கும் நாடகமா?
இதயங்கள் பேசும் தேன் ரகமா?
எது திருமணம்?
தோரணை போடும் யாழ் இசையா?
தேடல்கள் முடியாத பேராசையா?

விருந்துகள் போட்டியிடும் வசந்த கானமா?
வீழ்வுகளை கடந்து வரும் போர்க்களமா?

சங்கதிகள் பெருக்கும் சங்கீதமா?
சந்தோசம் நிலைக்கும் சுபராகமா?

மோகம் தொடரும் மேளதாளமா?
மோதல்கள் இருக்கும் மத்தளமா?

வாதம் முடியாத பட்டிமன்றமா?
வேதம் சொல்லும் பண்பாட்டா?
மஞ்சள் கயிறை புனிதமாக்கும் வினோதமா?
மஞ்சத்தில் ஒருவரையொருவர் மன்றாடும் மகாசபையா?
உறவுகள் வரவழைக்கும் உற்சாகமா?
பிரிவுகளை பார்க்க போகும் பந்தயமா?
வரதட்சணை பேசப்படும் வியாபாரமா?
விவாகரத்தை தூண்டும் அடித்தளமா?
இதில், திருமணம் சொல்வது எத்தனை?
அறிய செய்ய வேண்டும் சிந்தனை!
இதை அறிந்து விட்டால்,
சொந்தங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்
சொர்க்கம் ஆகும்.

உறவுகள்


நான் நேசித்த
சில உறவுகள்
என்னை நேசிக்கவில்லை
என்னை நேசித்த
சில உறவுகளை
நான் நேசிக்கத் துடிக்கும் போது
காலம் அருகில் இல்லை
இது வழ்வின் உண்மை..



                                     கயந்தன்.......

காதல் கவிதை

என்னவரே..
உன் திருமுகத்தை.. ஒருமுகமாக்கி..
என் அகக்கண்ணில் சிறை வைத்துள்ளேன்.
உன் வாசத்தை சுவாசமாக்கி உயிர் வாழ்கிறேன்.
உன் பசுமையான நினைவுகளை
இதயத்துக்குள் பதியமிட்டு பாதுகாக்கிறேன்.
என்னை நானே இத்தனை தயார் செய்தும்
பொருள் தேடி தூர தேசம் செல்லும் உன்னை
பிரிய மறுக்கிறது 'மனசு'
எனக்கு நீ கிடைக்கும் வரை-நான்
ஒரு மிருகம் -இன்று

நான் ஒரு மனிதன்........

காதலின் அர்த்தம் சொன்னாவள்-நீ
காமத்தின் எல்லைகள் கற்பித்தவள்-நீ
கண்களில் கவிதை எழுதுபவள் நீ......

சத்தங்கள் யாவும் சங்கீதமாக எனக்கு
உணரவைத்தவள் -நீ
சதங்களை விட வாழ்வை புரியவைப்பவள் நீ....

அழகு இல்லை வாழ்க்கை அது
அறிவு என்று சொல்வபள் நீ
மறைப்பதில்லை வாழ்க்கை -மனதை
திறப்பதுதான் வாழ்க்கை என்று புரியவைத்தாய் நீ..
நீ குருவுமில்லை என் கருவுமில்லை-ஆனால்
என் வாழ்வின் ஓளிவிளக்கு நீ
பிரிதல் இல்லை வாழ்க்கை -அது
புரிதல் என்று புரியவைத்தாய் நீ.......

கவிதை என்ற என் தேடலுக்கு -எனக்கு
விளக்கம் தந்தாய்- காதல்
இல்லை கவிதை -கவிதைதான்
காதல் என்று.....................
Heart என் தொலைபேசியில்
அழைப்பு வரும்போதெல்லாம்
உன் நினைவுகள்
என்னைக்கொல்லுதடி!
நீ எனக்காக விட்டுசென்ற
உன்னுடைய குரல்தானே
என் தொலைபேசியின் ரிங் டோன் ...
நீ என்முன்னே இருந்தும்
உன்னோடு பேசமுடியாத
பாவியானேனடி, நான் !
என்றாவது ,
உனக்கு என் நினைவிருந்தால்
ஒருநொடி பேசிவிட்டு போ ..... ... ...

என் இதயப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையிலே
தொலைந்து போன ஞாபகங்கள்
மீண்டும் என் கண் முன்னே...
உன்னைக் காணாமல்
கண்ணீரில் தத்தளித்த
என் விழிகள்...
உன் வரவை எதிர் பார்த்து
காத்திருந்து களைத்த
என் கால்கள்...
உன்னையே
சுற்றி சுற்றி வந்த
என் நினைவுகள்
உன் வார்த்தைகளை
வேத வாக்காக
சுமந்த என் நெஞ்சம்
இவைகள் அனைத்தும்
அழிக்க முடியாத
நினைவுகளாக
இன்னும் என் இதயப் புத்தகத்தில்...
வேகமாக விரைந்த பேருந்தில் நான்
சாலை திருப்பத்தில்
சட்டென மின்னி மறைந்தது
அவள் முகம்
இருக்கவா ...... இறங்கவா
திருவிழாவில் ஒற்றை செருப்பை
தொலைத்தவன் நிலைமையில் நான்
இருபது வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு
இமை பொழுதில் கடந்து சென்றது
இப்போதும் என் காதலை சொல்ல முடியவில்லை ....
மழை காலம் இல்லை`
மேகம் மூட்டம் இல்லை
மழை பொழிய வில்லை
வானவில் மட்டும் - தோன்றியதே...

வானவில்ற்கு
இங்கு என்ன வேலை
நடந்து போகும் உன்னை
வேடிக்கை பார்கிறதோ........
எரி மலையாய் இருந்த என்னை
பனி மலையாய் மாற்றிய - நீயே
கோடைக் கால வெயிலை போல் -ஏன்
என் மனத்தை சுட்டு விட்டாய் !

பற்றி எரியும்
மெழுகு வர்த்தியாய்
என் கண்களை உருக வைத்தாய்

உன் மனம் சிலை போல்
அழகானது என்று நினைத்தேன்
சிலை அழகனாலும் - அது
கல் என்று நிருபித்து விட்டாய் !
அன்பே ! உனக்காக
ஒரு சிறந்த கவிதை
எழுத நினைத்தேன்

முயற்சி செய்தேன் !
முடியவில்லை

உன்னைவிட
ஒரு சிறந்த கவிதை - எழுத
எவராளும் முடியாது
பேருந்தில் செல்லும் போது
உயிருள்ள ஜீவனாய் ஓடிக்கொண்டிருந்த
ஐந்து அறிவு நாயின்
கால்களின் மீது ஏற்றி ரத்த
ஆறாய் துடித்து கொண்டிருக்கிறது
கண்டும் காணாததாய் ஓட்டும்
ஓட்டுனர் சுற்றி வேடிக்கை பார்க்கும்
மனிதர்கள் பேருந்தில் இருந்து
துடிக்கும் என் இதயம் சத்தமிட்டு
திட்ட முனைகிறேன் இருந்தும்
வாயடைத்து விட்டேன் பெண்
என்பதால் பயணிக்கும் இத்தனை
பேருக்கு இல்லாத அக்கறை
உனக்கேதற்க்கு என்ற கேள்விக்காக
சுயநலத்தோடு செல்லும் மனிதர்களிடத்தில்
தன் இனத்திற்கு உயிர் ஊஞ்சல் ஆடினாலே
கவனிக்காத உலகம் ஐந்து அறிவு
ஜீவனுக்கு உதவவா போகிறது
இப்படி யோசித்து கொண்டு
துடிக்கும் என் இதயத்தோடு
கனத்த மனத்தோடு நானும்
ஊமையாகி விட்டேன் மௌனக்கதரளோடு !
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

தமிழ்.

















எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்.



உன் தோள்


உன் தோள் சாய்ந்து கொண்டேன்.

நீ என் தாய் இல்லை
அறிவுரை பல சொன்னாய்
அனால் நீ என் தந்தை இல்லை
பாசத்தால் அரவணைத்தாய்
என் உடன் பிறந்தவன் நீ இல்லை
உயிரை கூட நான் கேட்டால் தருவேன் என்கிறாய்
என் காதலி நீ இல்லை
நன்மை மட்டுமே எனக்கு நடக்க செய்யும்
நீ கடவுளும் இல்லை
இத்தனை உறவுகளும் பொய் ஆனாலும்
எனகென இருக்கும் ஒரே உறவு
என் தோழி நீயடி
இந்த பந்தம் தொடர தவம் செய்வேனே.


                        கயந்தன்.........

காதல் பிரிவு

இந்த காதல் பிரியும் போதுதான்

சொல்லவும் முடியாத
ஏக்கங்கள் தொடர ஆரம்பிக்கிறது, இதயத்தினுள் ஒரு வலி
யாரோ உள்ளிருந்து ஊசியால்
குத்துவது போல.....
உறக்கங்கள் என்னை விட்டு
வெகுதூரம் விரண்டோடுகிறது.....
சில நினைவுகள் மட்டும்
நெஞ்சினில் அழுத்தமாய், ஆனாலும் உள்ளார்ந்து
கருக்கொண்ட காதல் நினைவுகள்
என்றும் அழியாது.


                       கயந்தன்..........

விரல் பிடித்து.




















விரல் பிடித்து என்னுடன் வருவாள்

என்று தான் நினைத்தேன்........

இப்படி விலகிச் செல்வாள் என்று

தெரிந்திருந்தால் என்றோ விட்டிருப்பேன்

விரலை அல்ல..........

 என் .........." உயிரை ".......!!!!!
கைபேசி கையில் இருந்தால்...?
உனக்காக ஒரு
"கவிதை" குறுஞ்செய்தியாக உருவாகி
கொண்டிருக்கும்..!!
இல்லையென்றால்...,
"இதயம்"
உன் நினைவை அசை போடும்
துடிக்க மறந்து..!!

என்னை ஏனோ .



















என்னை ஏனோ இப்பொழுது நீ காதலிக்க மறுக்கிறாய்..........
என்றாவது ஒருநாள் நீ என்னை நினைக்ககூடும்...!!!
அப்பொழுது சொல்வாய்,,
"உன்னை நினைக்க மறுத்த என் மனம்
இப்போது உன்னை விட்டு பிரிய மறுக்கிறது "
என் கல்லறையில் நின்று கொண்டு ............
தொலைந்து
போஹவும்
இறந்து போஹவும்
ஆசை....

ஏனெனில்
தேடுவதற்கும்
அழுவதற்கும்
இனி-எனக்காய்
நீ இருப்பாயே
அதனால்......
நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்

என்னவளே..







































என்னவளே.. இதயம் சுட்டுப் போட்டவளே எனை தனிமை நெருப்பில் எரித்தவளே உயிரில்  பிரிவுத் தீயை இட்டவளே கொல்லாமலே எனை கொன்றவளே காதல் காதலென கைபிடித்தழைத்தவளே இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள் எனை வாழும் பிணமாக்கி வைத்தவளே வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது என்னில் நிகழ்ந்த தவறு கால …
காதல் ஒன்றும் பரீட்சையல்ல காகிதத்தில் எழுதிச் சொல்ல, கண்களின் உரையாடல் மொழியொன்றும் தேவையில்ல, இமைகளின் அசைவில் புகுந்திடும் காதல் இடைவெளியின்றி தொடர்ந்திடும் மோதல். ஆயிரம் கோடி ஆசைகள் ஆன்மாவில் ஊறும், அன்பின் பெருக்கம் அருவியாய்ப் பாயும், இதயத்தின் ...

உன்னைப்பார்க்காமல்
இன்னும் எத்தனை நாட்கள்
வாழப்போகிறேன்
தினமும் உன்னை பார்க்கும்
நாள் வரும் விரைவில்
...என்ன என்று யோசிக்கிறாயா?...
சொல்கிறேன் ...............
நான் இறந்து போன பின்பு
யார் என்னை தடுக்க முடியும்
உன்னை பார்ப்பதை!...

நண்பர்களே!பேசும் வார்த்தைகளை
இருவகையில் அர்த்தம் கொள்ளுங்கள்
நட்பு ஒன்றும் காதல் அல்ல,
அதைவிட சுகமானது
காதல் என்றும் சுகமான சுமையானது
...காதலை காரணம் ஆயிரம் சொல்லி மறைக்கலாம்
காயம் ஒருமுறை பட்டால் ஆறிவிடும்
உங்களுக்கும் புரிந்து இருக்கலாம்
வார்த்தைக்குள் இருக்கும் அர்த்தங்கள்
அர்த்தங்களை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்
என்றும் உன் வாழ்வு ஏற்றம்தான்..இனிய காலை வணக்கங்கள்

அம்மாவின் அரவணைப்பு ....
அப்பாவின் கண்டிப்பு ...
அண்ணாவின் குறும்பு ...
தங்கையின் சிணுங்கள் ..
நண்பர்களின் அரட்டை ...
...இது போன்ற சந்தோசங்களை விடுத்து
பதினெட்டு[18]வயதுக்குள்
காதலில் தோல்வி என்று சொல்லி திரியும்
முட்டாள்களுக்கு என்ன சொல்வது
எதுவரை வாழ்க்கை
எதற்கு இந்த சோகம்
இடையினில் காயம்
இதயத்தில் ஏக்கம்
மனதினில் மயக்...கம்
மழையினில் தூக்கம்
வழியினில் வலிகள்
விழியினில் கண்ணீர்
தடுமாறும் நெஞ்சம்
தடம் மாறும் உள்ளம்
புயலினில் கனவு
புரியாத பயணம்......

தோழி!
உன் இதயத்தை தருவாயா?
உனக்காகத் தவிக்கும்
என் இதயத்தை

...அதனோடு சேர்த்து பூட்டிவிட்டு
சாவியை கடலில் எறிந்து
தொலைத்துவிடலாம்...

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
மான் போல் துள்ளி குதித்த மனமே
இன்று சிலை போல் நின்றதேனோ
கொடி போல் படரும் நினைவே
இன்று கொடியிடை கண்டு
நான் தான் உன்னை மறந்துவிட்டேன் என்றேனே…
பின் ஏன் கனவில் வந்து கவிதை உரைத்தாய்?
கணமும் உன்னை நினையேன் என்றேனே…
பின் ஏன் கண்ணுக்குள் புகுந்து கண்மை கலைத்தாய்?


மறத்து போன உணர்வுகளையும்
மறந்து விட்ட நினைவுகளையும்
தட்டி எழுப்பி மனதில் ஏனோ மயக்கம் தந்தாய்.


நீ கொடுத்த நினைவுகளை அழித்துவிட
மனதின் ஆழத்தில் தள்ளிப் புதைத்தேன்
அதையே உரமாக்கி வேர் கொண்டு
விருட்சமாய் வளர்ந்தாய்!…


என் செய்து உன் வசம் விட்டு
என் வாசம் அடைவது?


உயிர் துறந்து மண்ணில் புதைந்த வேளையிலும் – ஐயோ!…
கல்லறைப் பூக்களாய் பூத்ததடா….
உன் ஞாபகம்!…….


யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.

Blog Archive

miCroSerViceabiE. Powered by Blogger.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. miCroSerViceablE.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger